Sunday, April 25, 2010

உரையாடல் கவிதை போட்டி முடிவுகள்

http://tamil.blogkut.com/uraiyaadal.php

போட்டி கடைசி தேதி = 14.01.2010

முடிவு தேதி = 01.03.2010

கவிதை போட்டி என்று ஒன்று வைத்து 267 பேரை முட்டாளாக்கி இன்றைய தேதி வரை முடிவு சொல்லாம இழுத்தடிக்கும் போட்டி நடத்தியவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

10 comments:

  1. Thanks Sister, you are the only lady with boldness came here to comment.

    heartfelt thanks

    Suryesh

    ReplyDelete
  2. சூர்யேஷ்: உங்கள் கருத்து இதுவாக இருக்கலாம். கொஞ்சம் யோசித்து பேசி இருக்கலாம். யாருக்குத்தான் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆசை இல்லை. போட்டி நடத்தியவர்களுக்குத் தனி மடல் அனுப்பிகேட்டிருக்கலாமே? யாருக்கும் யாரையும் பொது வெளியில் விமர்சிப்பது சுலபமாகிப் போய் விட்டது.

    தன்னார்வத்தில் இருவர் மட்டுமே இணைந்து போட்டி நடத்துவதும், வந்திருக்கும் இருநூறுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை வாசிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை, ஒரே நாளில் நான்கு கவிதைகளை வாசித்து பார்த்தால் தெரியும்ங்க வேதனை. தவிரவும், அவர்கள் பொருளீட்டித் தரும் தொழில்களை செய்துதான் இலக்கிய ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இது போன்று போட்டி நடத்தியும், கைகாசை போட்டும், கையைச் சுட்டுக் கொள்ளும் துணிச்சல் வெகு சிலருக்கே வருகிறது. நம்மால் இவர்களுக்கு வேறெந்த உதவி செய்ய முடியாவிட்டாலும் moral support தருவது மட்டுமே நல்ல பயன்களைத் தரும். யாரையும் demoralise செய்யாதீர்கள், ப்ளீஸ்.

    நட்பு வளர்ப்பது ரொம்ப ஈசி சார், ஒரு புன்னகை மட்டுமே போதும். முரணாக இருக்கத்தான் நிறையா வார்த்தைகள் வேண்டி இருக்கிறதுங்க.

    நன்றி,
    நல்ல விதமாகவே புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
    விதூஷ்.

    ReplyDelete
  3. தோழி தங்களின் விரிவான விளக்கங்களுக்கு மிகுந்த நன்றி. நான் பல முறை அவர்களது தளத்தில் சென்று எப்போது வெளிவரும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட பதிலளிப்பதில்லை. ஆகவே தான் இந்த பதிவு. பரிசுகள் அப்புறம், பதில் அளிக்கலாம் இல்லையா ?

    ReplyDelete
  4. தெளிவாக விளக்கிச் சொன்னமை நன்று விதூஷ் மேடம். போட்டியை நடத்துபவர்கள் யார், அவர்களின் பின்புலம் என்ன? அவர்களுக்கு இதுதான் வேலையா? இதுபோன்ற போட்டிகளை நடத்துவதில் இருக்கும் கடினம் என்ன.. இவைகளை எல்லாம் அவர் இடுகை போடும் முன் சற்று யோசித்திருக்கலாம்..

    ReplyDelete
  5. @ உழவன்

    யார் நடத்துகிறார்கள், அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று தெரியாமலா போடுவோம்,

    கவலைப்படாதீங்க உங்களுக்கு கண்டிப்பா பரிசு உண்டு

    ReplyDelete
  6. விதூஷ், உழவன்...
    Suryesh உள்பட யாரும் இங்கு பரிசு பணத்திற்காக இப்படி செய்யவில்லை... அங்கிகாரம்... அது கிடைக்க வேண்டும் என்பதற்காக... போட்டி நடத்துபவர்கள், கொஞ்சம் கூட போட்டியாளர்களைப் பற்றி கவலைப்படாமல், போட்டி முடிவு அறிவிப்பு எப்போது வரும் என்று கூட சொல்ல தயாராக இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை... போட்டியாளர்களுக்கு தினமும் http://naayakan.blogspot.com, போய் பார்த்து ஏமாந்து போவதே வேலையாகிப் போகிறது... இதை படித்த, இலக்கிய வட்டத்தில் இருக்கும் அவர்களுக்கு இவை எல்லாம் தெரியாதா...? என்ன..?

    ---
    நட்பு வளர்ப்பது ரொம்ப ஈசி சார், ஒரு புன்னகை மட்டுமே போதும். முரணாக இருக்கத்தான் நிறையா வார்த்தைகள் வேண்டி இருக்கிறதுங்க.
    ---
    எங்கே நீங்கள் உங்கள் புன்னகையை வைத்து உங்கள் தெருவிலோ, அல்லது உங்கள் அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை நிறுத்துங்கள் பார்போம்... அப்படி 60% நிறுத்தினால் கூட அடுத்த MLA நீங்கதான், உங்களுக்கான முதல் ஓட்டு என்னுடயதாகத் தான் இருக்கும்...

    நாங்கள் போட்டி முடிவு தேதியின் அடுத்த நாளிலோ, அடுத்த வாரத்திலோ எங்கள் வேதனைகளைத் தெரிவிக்கவில்லை... போட்டி முடிவு தேதி, மார்ச் முதல் வாரம், ஆனால் இப்போது மே முதல் வாரம்... நாங்கள் கவிதை போட்டியில் பங்கேற்று இருக்கிறோம்... போட்டியின் முடிவைத் தெரிந்து கொள்ள எங்களுக்கு முழு அதிகாரமும் இருக்கிறது... கவிதை போட்டி தள்ளிப் போகும் என்று சொல்ல அவர்களுக்கு சொல்லவும் அதிகாரம் இருக்கிறது... அதை அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும்... நான் முன்பே சொன்னது போல், எங்களுக்கு பணம் வேண்டாம்... அங்கிகாரம்... இந்த வார்த்தையை பெறுவதற்காகத் தான் நாங்கள் இப்படி பேச வேண்டி இருக்கிறது, அவர்களை முழுவதுமாக புரிந்து கொண்ட நீங்கள் கொஞ்சம் எங்களையும் புரிந்து கொள்ளுங்கள்... எங்கள் நட்புக்கு உங்கள் புன்னகை வேண்டாம், உங்கள் ஆதரவு மட்டும் போதும்...

    கிருபா. சரவணன்

    ReplyDelete
  7. தெளிவாக புரிந்து விளக்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

    ReplyDelete
  8. கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு

    நேசமித்திரன்
    பா.ரா
    நவாசுதீன்
    தேனம்மை
    காயத்ரி
    ஹேமா
    ராமலக்ஷ்மி
    லாவண்யா
    விஜய்
    நாவிஷ் செந்தில்குமார்
    பலாபட்டறை ஷங்கர்
    புபட்டியன்
    ஆதிமூலகிருஷ்ணன்
    பாலா
    அக்பர்
    கலகலப்ப்ரியா
    கமலேஷ்
    சிவாஜி சங்கர்
    முரளிகுமார் பத்மநாபன்
    தாமோதரன்

    ReplyDelete